வாய் சார்ந்த சில பிரச்சனைகள் மற்றும் ஒரு சில தொண்டை பிரச்சினைகளுக்கு நிவாரணமாக பல நூற்றாண்டுகளாக உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. பல நேரங்களில் இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியமாக செயல்பட்டு நம்மை நிம்மதியாக வைக்கிறது.
சளி, ஃப்ளு அலர்ஜி , சைனஸ் தொற்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி, தொண்டை தொற்று அல்லது அழற்சிக்கு சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய அசௌகரியங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
– உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது, அழற்சி மற்றும் எரிச்சலை குறைப்பதன் மூலம் தொண்டை வலியை கணிசமாக குறைக்கிறது. வீக்கமடைந்திருக்கும் திசுக்களில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்றவும் உப்பு உதவுகிறது.
– உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் காணப்படுகின்றன. எனவே உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவி, தொற்றுகளில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது.
– சுவாச நோய் உள்ளவர்களுக்கு உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் பழக்கம் மிகவும் நன்மை பயக்கும். இது கட்டியாக இருக்கும் சளியை உடைத்து தளர்த்தவும், congestion-லிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
– தினசரி உப்பு நீரில் தொடர்ந்து வாய் கொப்பளித்து வருவது ஓரல் என்விரான்மென்ட்டை (Oral environment) பராமரிப்பதன் மூலமும், வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் தொற்று பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து கொள்ள உதவும்.
உங்கள் உடலில் போதுமான கால்சியம் இல்லை என்பதற்கான 11 அறிகுறிகள்.!
உங்கள் உடலில் போதுமான கால்சியம் இல்லை என்பதற்கான 11 அறிகுறிகள்.!மேலும் செய்திகள்…
உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை:
– சுடு நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது சரி தான், ஆனால் அழற்சி ஏதேனும் ஏற்படுவதை தவிர்க்க நீங்கள் பயன்படுத்தும் நீரின் சூடானது வெதுவெதுப்பாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
– உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்றாலும், இந்த பழக்கம் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்று இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உப்பு நீரில் வாய் கொப்பளித்தும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறிகள் தொடர்ந்தால் அல்லது மோசமானால் உடனடியாக உரிய மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.
– உப்பு நீரில் வாய் கொப்பளிக்கும் போது அந்த தண்ணீரில் எவ்வளவு உப்பு சேர்க்கிறோம் என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அதிக உப்பை பயன்படுத்தினால் அது தொண்டையில் அல்லது வாயில் எரிச்சலை ஏற்படுத்த கூடும். அதே சமயம் மிக குறைந்த அளவு உப்பு சேர்த்தாலும் அது நிவாரணம் அளிக்கும் அளவிற்கு பயனுள்ளதாக இருக்காது. 1 கப் தண்ணீருக்கு தோராயமாக 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
– தொண்டை சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் கூட தினசரி போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது ஒட்டுமொத்த தொண்டை ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஒன்று.