மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை

by Column Editor

ஆண்டிபட்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, உடங்கல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மேகமலை வனத்துறை தடை விதித்துள்ளது. அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் தண்ணீர் வரத்து குறைந்து சீராகும்வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடரும் என மேகமலை வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் மேகமலை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment