வடக்கு அயர்லாந்தில் உள்ள பாடசாலை ஆதரவு ஊழியர்கள் ஊதியப் பிரச்சினையின் ஒரு பகுதியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ஆம் திகதி) 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
யுனைட் தொழிற்சங்க உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை, ஒரே நாளில் ட்ரான்ஸ்லிங்க் பேருந்து மற்றும் ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்துடன் ஒத்துப்போகிறது.
வகுப்பறை உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், சத்துணவு வழங்குவோர், நிர்வாகம் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என்று யுனைட் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஆயிரக்கணக்கான ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் இருந்து வெளிநடப்பு செய்து தங்கள் ஊதியத்தை உயர்த்தக் கோரி வந்தனர்.
யுனைட், ஜிஎம்பி மற்றும் எஸ்ஐபிடியு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ஊதியத்திற்கு எதிரான போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பொதுப் போக்குவரத்து வழங்குநரான ட்ரான்ஸ்லிங்க், உட்கட்டமைப்புத் துறையிலிருந்து ஊதியச் சலுகைக்கான வரவுசெலவுத் திட்டடத்தைப் பெறவில்லை என்றும், அதனால் ஊழியர்களுக்கு ஊதியச் சலுகை வழங்க முடியாது என்றும் கூறியது.