76
இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் 10 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து குடிவரவு அமைச்சர் Robert Jenrick ரினால் குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலம் மற்றும் சமூகப் பராமரிப்பில் பணிபுரிபவர்கள் தங்களோடு தங்கியிருப்பவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.