மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான அழகர் கோயில் மலையின் அடிவாரத்தில் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. அழகர் கோவில் மழை உச்சியில் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் மிகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் மதுரை அழகர் கோயில் பதினெட்டாம் கருப்பணசுவாமி கோயிலின் எதிர்ப்புறத்தில் உள்ள பவித்ர புஷ்பகரணி குளம் கடந்த சில நாட்களாகவே வறண்டும், பராமரிப்பின்றியும் காணப்பட்டு வந்தது.இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி, மதுரை அழகர் கோயில் பகுதியில் அதிக மழைப்பொழிவு காரணமாக நூபுர கங்கை தீர்த்தம் இக்குளத்திற்கு வர தொடங்கியுள்ளது.
குறிப்பாக அழகர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் இக்குளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தற்போது, தண்ணீர் வர தொடங்கியுள்ளதால் கோயில் நிர்வாகம் சார்பாக குளத்தின் படிக்கட்டுகளில் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தியும், குளத்தை சுத்தம் செய்து வருகின்றனர்.