டிப்ஸ் 1:
நாம் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை பால் காய்ச்சுவது. இனிமேல் பால் காய்ச்சும் போது பால், தண்ணீர் எல்லாம் கிச்சன் மேடை மீது வைத்து ஊற்றிய பிறகு அடுப்பின் மீது வைக்கலாம். இதனால் பால் சிந்தி வீணாகாது.
டிப்ஸ் 2:
எலுமிச்சம்பழம் உலர்ந்துவிட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
டிப்ஸ்3
பால் காய்ச்சி அடுப்பில் வைக்க மறந்து விட்டீர்களா. அடிபிடித்து லேசாக தீய்ந்த வாடை அடிக்கிறது என்றால், இனிமேல் அதில் ஒரு வெற்றிலையை போட்டால், கருகிய வாடை காணாமல் போகும்.
டிப்ஸ் 4:
அதேபோன்று, பால் பொங்கி வழிவது நமக்கு பெரிய தலைவலியாக இருக்கும். பால் காய்ச்சும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விடுங்கள். அதன் பின்பு பாலை அந்த பால் காய்ச்சும் கிண்ணத்தில் ஊற்றினால் அடுப்பில் வைத்து காய்ச்சினால், பால் பொங்கி வழியாது.
டிப்ஸ் 5
நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
டிப்ஸ் 6
வாழை இலையின் பின்பக்கத்தை லேசாக நெருப்பின் அனலில் காட்டிவிட்டு, அதன் பின்பு அதில் பொட்டலம் மடித்தால், வாழை இலையை எவ்வளவு சுருட்டி மடித்தாலும் அது கிழியாது.
டிப்ஸ் 7:
காலிஃப்ளவரை சமைக்கும் போது அதில் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். சமைத்து முடித்த பிறகு அதிலிருந்து பச்சை வாடை வீசாது. அதே சமயம் அதனுடைய நிறம் மாறாமல் இருக்கும்.
டிப்ஸ் 8:
காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும்.