கேன்சரை தடுக்கும் சக்தி கொண்ட மாதுளம் பழச்சாறு..!

by Editor News

காலை நேரத்தில் பருகுவதற்கான ஒரு ஆரோக்கியமான பானமாக பழச்சாறுகள் அமைகின்றன. மாம்பழச் சாறு, ஆரஞ்சு ஜூஸ், பைனாப்பிள் ஜூஸ், மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜூஸ் போன்ற பல வகையான பழச்சாறுகளுக்கான விளம்பரங்களை நாம் பார்த்திருக்கக்கூடும். ஆனால் மாதுளம் பழ சாறு பற்றி மிகக் குறைவாகவே பேசப்பட்டுள்ளது. இந்த பதிவில் மாதுளம் பழச்சாறு குடிப்பதால் கிடைக்கக்கூடிய சில நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மாதுளம் பழச்சாற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிக அளவில் இருப்பதால் அது நமது ஒட்டு மொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் மாதுளம் பழச்சாறு குடிப்பதற்கும் ஒரு சுவையான பானமாக இருக்கிறது.

ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்தது : மாதுளம் பழச்சாற்றில் காணப்படும் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கு உடலுக்கு உதவுகிறது. இதன் காரணமாக வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. அதோடு மாதுளம் பழச்சாற்றில் காணப்படும் punicalagin மற்றும் anthocyanins போன்ற ஆன்டிஆக்சிடன்ட்கள் செல்களை சேதங்களில் இருந்து பாதுகாக்கின்றன.

இதய ஆரோக்கியம் :

மாதுளம் பழச்சாறு இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருவதாக ஒரு சில ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கமான முறையில் இதனை பருகுவது ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கும் உதவுகிறது. தமனிகளில் பிளேக் உருவாவதை தடுப்பதன் மூலமாக இதயம் தொடர்பான நோய்களை தடுக்க மாதுளம் பழச்சாறு துணை புரிகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது :

மாதுளம் பழச்சாற்றல் வைட்டமின்கள் சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் முக்கியமான செயல்பாடுகளில் உதவி புரிவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது. உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கும் மாதுளம் பழச்சாறு கைகொடுக்கிறது.

நல்ல செரிமானம் :

மாதுளம் பழச்சாறில் நார்ச்சத்து அதிகம் உள்ள காரணத்தினால் இது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானம் தொடர்பான கோளாறுகளை சரி செய்கிறது. மலச்சிக்கலை தடுப்பதற்கு இது அவசியமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மாதுளம் பழச்சாற்றில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவுகிறது.

புற்றுநோயை தடுக்கிறது :

மாதுளம் பழச்சாற்றில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட காம்பவுண்டில் புற்று நோய்க்கு எதிரான பண்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது, குறிப்பாக ப்ராஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயை தடுப்பதில் இது பயனுள்ளதாக இருக்கிறது.

வீக்கத்திற்கு எதிராக போராடும் விளைவுகள் :

நாள்பட்ட வீக்கம் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. மாதுளம் பழச்சாற்றில் ஆன்டி இம்ஃப்ளமேட்டரி பண்புகள் இருப்பதன் காரணமாக ஆர்த்ரைட்டிஸ் போன்ற நிலைகளால் ஏற்படக்கூடிய அறிகுறிகளை தணிக்கிறது. மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதால் மூட்டு வலி குறைகிறது.

சரும ஆரோக்கியம் :

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தவிர மாதுளம் பழச்சாறு சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு பெறுவதற்கும் உதவுகிறது. முகப்பரு மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதற்கு உங்களது வழக்கமான டயட்டில் மாதுளம் பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாதுளம் பழச்சாற்றில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் இதில் காணப்படும் இயற்கை சர்க்கரை காரணமாக நீரிழிவு நோயாளிகள் இதனை பருகும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைக்கலாம், உடல் எடையை அதிகரிக்கலாம் மற்றும் ஒரு சில மருந்துகளுடன் வினைபுரியலாம். எனவே மாதுளம் பழச்சாற்றை அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Related Posts

Leave a Comment