சுரங்கபாதைகள் அனைத்தும் போக்குவரத்து தடையின்றி சீராக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக சென்னையில் கிண்டி, தியாகராய நகர், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் தற்போது வரை 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தேங்கிய 43 இடங்களில், 37 இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. முறிந்து விழுந்த 5 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகள் அனைத்தும் தடையின்றி சீராக இயங்குகிறது என்று கூறியுள்ளது.