சபரிமலை ஐயப்பன் கோவில் 60 நாட்கள் நடைபெறும் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்ட நிலையில் ஐயப்பன் பக்தர்களின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. முதல் நாள் முதலே சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 16ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 789 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.இதனால் இன்னும் கூடுதலாக பக்தர்கள் வருகை அதிகரிக்க கூடும் என்பதால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு மற்றும் கேரள அரசு ஏற்படுத்தும் இணைந்து துரிதமாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ளது. முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்து செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.