வாழைப்பூ கோலா உருண்டை..!

by Editor News

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1,
சோம்பு – 1ஸ்பூன்,
கிராம்பு – 3, பட்டை – 1,
பூண்டு – 4 பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
சின்ன வெங்காயம் – 10,
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை- 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி -1 கைப்பிடி எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை இந்தக் கோலா உருண்டை செய்ய முதலில் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் மோர், மஞ்சள் தூள் இரண்டும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் சுத்தம் செய்து வைத்த வாழைப்பூவை போட்டு வைத்து விடுங்கள். நாம் சமைக்கும் வரை இது கருத்துப் போகாமல் இருக்கும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சுத்தம் செய்து வைத்த வாழைப்பூவை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து கொள்ளுங்கள். இதை லேசாக வதக்கி தட்டு போட்டு ஐந்து நிமிடம் வரை வேக வைத்து கொள்ளுங்கள். வாழைப்பூ அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கலந்து விடுங்கள். தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள். –

வேக வைத்த வாழைப்பூவை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், பொட்டுக்கடலை அனைத்தையும் சேர்த்த நன்றாக அரைத்து விடுங்கள். இத்துடன் ஆற வைத்த வாழைப்பூவும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலில் அரைத்த வாழைப்பூ மாவு இத்துடன் மிளகாய் தூள் உப்பு கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஒரு வேளை மாவு இளகலாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். – Advertisement – இதையும் படிக்கலாமே: சப்பாத்தி மீந்து போன காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு இப்படி சுவையா செஞ்சி குடுங்க. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கலந்து வைத்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக பிடித்து போட்டு நன்றாக சிவந்தவுடன் பொரித்து எடுங்கள். சுவையான வாழைப்பூ கோலா உருண்டை அருமையாக தயாராகி விட்டது….

Related Posts

Leave a Comment