மேஷம்
முக்கியமான விஷயங்களில் இன்று உங்கள் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். பணவரவு ஒருபக்கம் சாதாரணமாக இருந்தாலும், இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம்.
ரிஷபம்
காதல் தொடர்பான தகராறுகள் இன்று தீரும். தம்பதியருக்குள் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படும். இன்று உங்களது வெற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாகும். உங்களது பொருளாதார நிலை இன்று ஏற்றம் பெறும். உங்கள் ஆரோக்கியத்திற்கு இன்று முக்கியத்துவம் கொடுங்கள். புதிய பொறுப்புகள் உங்கள் வசம் வரலாம்.
மிதுனம்
காதல் உறவுகளில் இன்று மகிழ்ச்சி பெருகும், புதிய இடங்களுக்கு துணையுடன் செல்ல முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வரை விடாமல் போராடுவதில் இன்று தீர்க்கமாக இருங்கள். உங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் பலனளிக்கத் தொடங்கும். சுய பாதுகாப்பு மற்றும் உங்கள் உடல் தேவைகளில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் இன்று ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் உள்ளுணர்வு மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். இன்று உங்கள் வாழ்வில் நடக்கும் மாற்றங்களை ஏற்று கொண்டால் எதிர்காலத்தில் வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்பு அல்லது நிதி ஆதாரம் இன்று கிடைக்கலாம்.
சிம்மம்
காதல் வாழ்வு இன்று உங்களுக்கு சிறப்பாக அமையலாம். புதிய காதலை ஆர்வமுடன் எதிர்பார்ப்போருக்கும் சரி அல்லது தற்போதைய பார்ட்னருடன் பிணைப்பு நெருக்கமாக வேண்டும் என்று நினைப்போருக்கு சரி, இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். ஒருபக்கம் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு இருந்தாலும் மறுபக்கம் நீங்கள் செலவை கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தில் சிக்கல் எழலாம்.
கன்னி
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய நபரை இன்று சந்திப்பீர்கள். ஏற்கனவே உறவில் இருப்பவர்கள் இன்று நேர்மையாக இருக்க வேண்டும். அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வருமானம் இன்று அதிகரிக்கலாம் அல்லது சில புதிய நிதி வாய்ப்புகள் கிடைக்கலாம்.
துலாம்
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று நீங்கள் சில சச்சரவுகளை சந்திக்க கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பாசமாக மற்றும் நேர்மையாக இருங்கள். நீங்கள் இன்று பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். உங்கள் வழியில் சில தடைகள் அல்லது சவால்கள் இருக்கலாம் ஆனால் உங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறி செல்வதில் உறுதியாக இருங்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் காதல் வாழ்வில் நேற்மறை நிறைந்து இருக்கும். இதன் காரணமாக உறவுகளுக்குள் வலுவான பிணைப்பு அல்லது புதிய காதல் ஆர்வம் ஏற்படும். உங்கள் கூடவே இருக்கும் சில உங்கள் மீது போட்டி மற்றும் பொறாமை கொள்ள கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். புதிய வாய்ப்புகளுக்கான கதவை திறப்பதில் உங்களின் முயற்சி இன்று முக்கியம். உங்களுக்கு இன்று கிடைக்கும் புதிய அனுபவங்கள் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தனுசு
உங்கள் காதல் வாழ்க்கை இன்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம். நீங்கள் சில தடைகளை எதிர்கொண்டாலும், நம்பிக்கையை கைவிடாதீர்கள். அலுவலகத்தில் நீங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடலாம். என்ன நடந்தாலும் உங்கள் இலக்குகளில் குறியாக இருந்தால் சாதிக்கலாம். இன்று உங்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கலாம்.
மகரம்
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சாதகமான மாற்றங்கள் இருக்கலாம். ஒரு புதிய உறவின் தொடக்கம் உங்களை உற்சாகமாக வைக்கலாம். தவறான தகவல் தொடர்புகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த கூடும். பணியிடத்தில் இன்று உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம் அல்லது எதிர்பாராத வாய்ப்பு வழங்கப்படலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணிகளை இன்று முடிப்பீர்கள்.
கும்பம்
உறவுகள் வலுவடைய இன்று நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். இன்று நீங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடலாம். தடைகளை சமாளிப்பது கடினமாக இருந்தாலும் உங்களது பொறுமை அல்லது நிதானம் இதில் உங்களுக்கு உதவும். முன்னேற்ற பாதையில் செல்வதற்கான ஆற்றல் அல்லது உதவி உங்களுக்கு கிடைக்கலாம்.
மீனம்
உறவுகளுக்குள் உணர்வு ரீதியான மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க வெளிப்படையாக மனம்விட்டு பேச வேண்டும். பார்ட்னரின் மீது அக்கறை மற்றும் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் நஷ்ட்டத்தை சந்திக்க நேரிடும். நீங்கள் எதிர்பார்க்காத வாய்ப்புகள் இன்று உங்களுக்கு கிடைக்க கூடும்.