பாலிவுட் திரையுலகிற்கு தற்போது கையில் கிடைத்த மிகப்பெரும் ஆயுதம் ஸ்பை யுனிவர்ஸ். நமக்கு எப்படி லோகி யுனிவர்ஸோ அது போல் பாலிவுட் இந்த ஸ்பை யுனிவர்ஸை கையில் வைத்துக்கொண்டு பாலிவுட்டில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களையும் அதற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது, அதை நிரூபணம் ஆக்கும் பொருட்டு, ஷாருக்கான் ,சல்மான் கான், ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் ஆகியோர் இந்த யுனிவர்ஸுக்குள் வந்துவிட்டனர், இந்த நிலையில் சல்மான் கான் நடிப்பில் இந்த யுனிவர்ஸின் ஒரு பகுதியாக டைகர் 3 வெளிவர, படம் எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
சல்மான் கான் ஆஸ்திரியாவில் தன் ஸ்பை காதலி மற்றும் பாகிஸ்தான் உளவாளி கேத்ரீனா கைப்-வுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார், இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதி இம்ரான் ஹஸ்மி இந்தியாவும், பாகிஸ்தானும் காலத்திற்கும் ஒன்று செரக்கூடாது என்று ஒரு சதித்திட்டத்தை தீட்டுகின்றார்.
அந்த திட்டத்தை சல்மானை வைத்தே முடித்து அவரை தேசத்துரோகியாக உலக நாடுகள் மத்தியில் காட்ட முயற்சிக்க, இதை சல்மான் எப்படி முறியடித்தார் என்ற ஆக்ஷன் அதகளமே இந்த டைக்ர 3.
படத்தை பற்றிய அலசல்
சல்மான் ஏக் தா டைகர், டைகர் ஜிண்டாகி அதில் எப்படி பார்த்தோமோ அதே போல் தான் இருக்கின்றார், படத்தின் ஆரம்பத்திலேயே தன் சக உளவாளியை காப்பாற்ற பைக்கில் அவர் அடிக்கும் சாகசம் விசில் பறக்கின்றது.
டைகர் 3 திரை விமர்சனம் | Tiger 3 Movie Review Tamil
அதே நேரத்தில் படம் அங்கையே நின்று இடைவேளை வரை, நாம் ஆக்ஷன் படத்திற்கு தானோ வந்தோம் என்று கேட்கும் படி தான் செல்கின்றது.
ஒரு வழியாக இடைவேளை பிறகு பாகிஸ்தானிலேயே சல்மான் தப்பித்து அங்கு இருக்கும் சதித்திட்டங்களை அவர் தும்சம் செய்யும் காட்சிகள் அட ஸ்பை யுனிவர்ஸே இப்போது தான் ஆரம்பிக்கின்றது என சொல்ல வைக்கின்றது.
அதிலும் ஷாருக்கான் கேமியோ சண்டைக்காட்சி மிரட்டல், லாஜிக் பார்க்காதீங்க நண்பா, மேஜிக் பாருங்க டைப் சண்டைக்காட்சி தான்.
10 ஆயிரம் குண்டுகள் டைகரை நேருக்கு நேர் சுட்டாலும், ஒரு புல்லட் கூட அவர் மேல் படவில்லை, ஆனால், அவர் சுடும் ஒவ்வொரு புல்லட்டிலும் ஒவ்வொருவரும் இறக்கின்றனர், என்ற காலம் காலமான மாஸ் ஹீரோ டெம்ப்ளேட் தான் இதிலும்.
ஆனால், இதில் அதை எடுத்த விதம் நம்மை திரையுடன் கட்டிப்போடுகின்றது, படத்தின் ஒளிப்பதிவும் மிகப்பெரிய பலம், குறிப்பாக பல நாடுகளுக்கு கதை செல்வதால் அதை மிக பிரமாண்டமாக ஒரு மிஸின் இம்பாசிபுள் போல் காட்டியது சிறப்பு.
டைகர் 3 திரை விமர்சனம் | Tiger 3 Movie Review Tamil
அதே நேரத்தில் இசை கொஞ்சம் சோதிக்கின்றது, படத்தில் இன்னொரு சுவாரஸ்யம், பாகிஸ்தான் பிரதமர் நம்ம சிம்ரன் தாங்க, அதே போல், இந்தியாவின் முக்கிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி நடிகர் ரேவதி, இப்படி நமக்கு தெரிந்த முகங்களும் படத்தில் இருப்பதால் ஹிந்தி படம் என்பதை மறந்தே பார்க்கலாம்.
க்ளாப்ஸ்
படத்தின் சண்டைக்காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு.
படத்தின் இரண்டாம் பாதி.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.
லாஜிக் எல்லை மீறல்கள்.
மொத்தத்தில் முதல் 2 பாகத்தில் இருந்து வேகம், பரபரப்பு இதில் கொஞ்சம் குறைவு என்றாலும், இரண்டாம் பாதி ஆக்ஷன் அதகளத்தில் அதை மறக்க வைத்து நல்லாதானே இருக்கு, அட நல்லாருக்குப்பா என்று சொல்ல வைத்துள்ளனர்.