சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 17ஆம் தேதியான இன்று முதம் (கார்த்திகை 1ம் தேதி) தொடங்குகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில் முக்கியமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
மேலும் இதையொட்டி சென்னை முதலான பல ஊர்களிலும், காலையிலேயே கோவில்களில் பக்தர்கள் குவியத் தொடங்கினார்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களில், சமீபத்தில் மழை வெளுத்து வாங்கியதால், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை கார்த்திகை முதல் நாளில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழையை பொருட்படுத்தாமல், காலையிலேயே விரதம் இருக்கத் தொடங்கி விட்டார்கள் ஐயப்ப பக்தர்கள்.
இதையொட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில், மதுரையில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் துவக்கினார்கள் பக்தர்கள்.

விளம்பரம்

மேலும் படிக்க… சபரிமலை மண்டல பூஜை : ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
இதையொட்டி, சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில், மதுரையில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் துவக்கினார்கள் பக்தர்கள்.
கார்த்திகை மாதத்தையொட்டி இரண்டு நாட்களுக்கு முன்பே சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம் முதலான பல மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சிலர், கடந்த வாரமே விரதம் இருக்கத் துவங்கி, சபரிமலை ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க, இருமுடி கட்டிக் கொண்டு பயணமாகிவிட்டார்கள். மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.