குறைந்த தங்கம் விலை..!!

by Editor News

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615ஆக விற்பனையானது. அதேபோல நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து 45 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,635க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மட்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment