102
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
மைதா மாவு – 4 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான வெங்காய போண்டா ரெடி.