சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் 18 திருப்படிகளில் 18 திருநாமங்களுடன் சுவாமி ஐயப்பன்..!!!

by Editor News

சபரிமலை ஐயப்பனை காண நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் இருமுடி ஏற்று விரதம் இருந்து வெறும் காலில் நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர். இவ்வாறாக வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் குறைகளை தீர்த்து நலம் பயக்கிறார்.

சபரிமலையில் 18 திருப்படிகளையும் தொட்டு வணங்கி கொண்டே மேலே செல்வது வழக்கம். ஏனென்றால் 18 படிகளிலும் 18 திருநாமங்களில் குடி கொண்டிருக்கிறார் சுவாமி ஐயப்பன். அதனால்தான் திருப்படிகளை தொட்டு வணங்குவது அவசியம்.

சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் 18 படிகள் ஏறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த 18 படிகளிலும் சுவாமி ஐயப்பன் 18 திருநாமங்களில் அருள்பாலிக்கிறார்.

ஒன்றாம் திருப்படியில் குளத்துப்புழை பாலகன், இரண்டாம் திருப்படியில் ஆரியங்காவு ஐயப்பன், மூன்றாம் திருப்படியில் எரிமேலி சாஸ்தா, நான்காம் திருப்படியில் அச்சங்கோயில் அரசன், ஐந்தாம் திருப்படியில் ஐந்துமலை அதிபதி, ஆறாம் திருப்படியில் வீரமணிகண்டன், ஏழாம் திருப்படியில் பொன்னம்பல ஜோதி, எட்டாம் திருப்படியில் மோகின் பாலன், ஒன்பதாம் திருப்படியில் சிவபாலன், பத்தாம் திருப்படியில் ஆனந்தமயன், பதினொன்றாம் திருப்படியில் இருமுடிப்பிரியன், பனிரெண்டாம் திருப்படியில் பந்தளராஜகுமாரன், பதிமூன்றாம் திருப்படியில் பம்பாவாசன், பதிநான்காம் திருப்படியில் வன்புலி வாகனன், பதினைந்தாம் திருப்படியில் ஹரிஹரசுதன், பதினாறாம் திருப்படியில் குருநாதன், பதினேழாம் திருப்படியில் சபரிகிரி வாசன், பதினெட்டாம் படியில் சுவாமி ஐயப்பன் என 18 தோற்றங்களில் அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன். இந்த 18 படிகளும் சுவாமி ஐயப்பனின் குழந்தை பருவம் முதலான 18 காலங்களை குறிப்பிடுபவை ஆகும்.

Related Posts

Leave a Comment