பாக்கியலட்சுமி சீரியலை தற்போது பாக்யா வீட்டில் அனைத்து பக்கங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் தான் வந்துகொண்டிருக்கிறது. கேன்டீன் போய்விட்டது, மசாலா கம்பெனி நடத்தும் இடமும் போய்விட்டது என பாக்யா சோகத்தில் இருக்கிறார்.
எதாவது கேட்டரிங் ஆர்டர் இருந்தால் சொல்லுங்க என பாக்யா பழனிச்சாமியை சந்தித்து கேட்டிருக்கிறார்.
மேலும் செழியன் இன்னொரு பெண்ணுடன் பழகியது தெரிந்து ஜெனி வீட்டை விட்டு போனதும் பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது. அடுத்து எழில் வாழக்கையும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நாளைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா தனக்கு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் 15 நாள் கடை நடத்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என சொல்கிறார்.
அதை கேட்டு கோபி எதோ அட்வைஸ் சொல்ல போகிறார்,. அதை கேட்டு ராதிகா அவரை தடுக்கிறார். நம்ம பிஸ்னஸே முழுகிட்டு இருக்கு, அவங்களுக்கு அட்வைஸ் சொல்றீங்களா என கேட்டு அசிங்கப்படுத்துகிறார்.