கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையே போர் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போரினால் இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தின் அதிரடி தாக்குதல் காரணமாக காசா நகரத்தில் உள்ள அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிய போது ’போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் நாங்கள் தான் முடித்து வைப்போம் என்று கூறினார்.
காசாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டிற்கு பல உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் உள்ள காசாவில் பொது மக்களுக்கு நேரும் அவலங்களுக்கு ஹமாஸ் அமைப்புகள் தான் காரணம் என்றும், இஸ்ரேல் அதற்கு பொறுப்பேற்காது என்று கூறினார்.
காசாவில் உள்ள குழந்தைகள் வயதானவர்கள் பெண்கள் ஆகியோர் ஹமாஸ் பிடியில் உள்ளனர் என்றும் இது மனிதநேயத்திற்கு எதிரானது என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.