ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் என்ற தீபகற்பத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 800-க்கும் அதிகமான முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நாட்டின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கிட்டத்தட்ட 4,000 சிறிய மற்றும் நடுத்தர தீவிர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், மிகப்பெரிய நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளதாகவும் ஐஸ்லாந்தின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் நிலநடுக்கம் காரணமாக எரிமலை சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கணித்துள்ள அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. ஐஸ்லாந்தின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான புளூ லகூன் புவிவெப்ப ஸ்பா, வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.