இருமல் மற்றும் நெஞ்சு சளியை விரட்டும் கஷாயம்..!

by Editor News

மழை மற்றும் பனி என மாறி மாறி இருக்கும் பருவநிலையால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். வீட்டில் ஒருவருக்கு வந்தாலே குடும்பத்தில் அனைவரையும் தொற்றிவிடுகிறது. ஆரம்பத்திலேயே நெஞ்சு சளி மற்றும் இருமலை விரட்டி அடிக்கும் இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள். சளி , இருமல் வந்த இடம் தெரியாமல் போகும்.

வீட்டு வைத்தியம் :

இஞ்சி ஒரு துண்டு , துளசி அரை கைப்பிடி, தேன் 3 ஸ்பூன் என எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் இஞ்சியை நன்கு இடித்து அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் துளசியையும் நன்கு இடித்து அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். சாறு பிழிய காட்டன் துணியை பயன்படுத்தி பிழிந்தால் சாறு நன்கு வரும்.

பின் இரண்டு சாறையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். அதில் தேன் கலந்துகொள்ளுங்கள். இப்போது அப்படியே அதை குடித்துவிடுங்கள்.

யார் யார் எவ்வளவு குடிக்க வேண்டும்..?

இதை ஒரு வயது முடிந்த குழந்தை முதல் கொடுக்கத் தொடங்கலாம். அவர்களுக்கு அரை ஸ்பூன் வீதம் தரலாம். 3-5 வயது குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் கொடுக்கலாம். 5-8 வயது குழந்தைகளுக்கு 2 ஸ்பூன் தரலாம். 8-12 வயதுக்கு 3 ஸ்பூன் தரலாம்.

டீன் ஏஜ் பிள்ளைகள் முதல் நடுத்தர வயது கொண்டவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். தினமும் 2 வேளை குடிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள், சிகிச்சை எடுத்து வருகிறீர்கள், மாத்திரை உட்கொள்கிறீர்கள் எனில் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குடிக்கலாம்.

Related Posts

Leave a Comment