இந்து நாட்காட்டியின்படி, ஐப்பசி மாத அமாவாசை நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட மக்கள் முன்கூட்டியே தயாராகி வருகின்றனர். இதில் புதிய விளக்குகள் வாங்குதல், வீட்டை சுத்தம் செய்தல், வீட்டில் ரங்கோலி கோலம் போடுதல், விதவிதமான உணவுகள் தயாரித்தல், இனிப்பு பலகாரங்கள் என அனைத்தையும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றனர்.
இந்த நாளில் இலங்கையை வென்று அயோத்திக்கு ராமர் திரும்பினார் என்றும், அயோத்தி மக்கள் ராமரை விளக்குகள் ஏற்றி வரவேற்றனர் என்பதும் மத நம்பிக்கை. தீபாவளி நாளில் தீபம் ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள். லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாக தீபாவளியன்று வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் தீபம் ஏற்றினால் இருள் நீங்கும். அமாவாசை அன்று ஒரு நெய் தீபமும், மற்றொன்று எண்ணெய் தீபமும் ஏற்றும் வழக்கம் உள்ளது.
எண்ணெய் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்:
மண் விளக்கில் கடுகு எண்ணெய் வைத்து வீட்டில் தீபம் ஏற்றினால் சனி, செவ்வாய் பலம் அடைவார்கள் என்கிறார் அயோத்தியின் ஜோதிடர் கல்கி ராம். இதனுடன் இந்த கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். லட்சுமி தேவியும் மகிழ்ச்சியடைந்து, மகிழ்ச்சியையும் செழிப்பையும் அள்ளிக் கொடுப்பாள்.
நெய் விளக்கு ஏன் ஏற்றப்படுகிறது?
தீபாவளியன்று நெய் தீபம் ஏற்றுவதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்நாளில் பசு நெய்யில் தீபம் ஏற்றினால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். வீட்டில் செல்வ வளம் பெருகும். பணம் மற்றும் தானியங்களுக்கு பஞ்சமிருக்காது. தீபாவளி அன்று வழிபாட்டின் போது முதலில் லட்சுமி தேவியின் முன் நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணம் இதுதான்.
நெய் தீபம் ஏற்றி வீட்டில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
1. பூஜை அறையில் ஐந்துமுக விளக்கு வைத்து, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.
2. குலதெய்வம் நம் வீட்டிற்குவர சுத்தமான நெய் மற்றும் விளக்கெண்ணை கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
3. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் நெய் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறையும் அற்புத பரிகாரமாகும்.
4.நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷம் இல்லத்தில் நிலைத்து இருக்கும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெறலாம். வருமானம் அதிகரிக்கும்.
5. பித்ரு தோசம் உள்ளவர்கள் தொடர்ந்து அமாவாசைக்காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோசம் விலகும்.
6. வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய்தீபம் ஏற்றி வழிபட கணவன் மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.
7. வியாழக் கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர குழந்தை வரம் கிடைக்கும்.