வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவு – வானிலை ஆய்வு மையம்

by Editor News

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை சார்ந்த வேளாண்மை டெல்டா பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகவே மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் இன்று காலை வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 15 சதவிதம் குறைவாக பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 243.6 மி.மீ பதிவாக வேண்டிய சூழலில் 206.4 மி.மீ மட்டுமே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் படிப்படியாக பற்றாக்குறை குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment