2 நிமிட மேகி நூடுல்ஸ் என்பது உங்கள் வயிற்றுக்கும் உட்புற உறுப்புகளுக்கும் பெரிய பாதிப்பாக அமையும். அதனால் இந்த உணவினைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு காரணம், இந்த உணவை அதிகமாக உட்கொண்டவர்கள் பலர் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
நேரமின்மையும், அளவுக்கு அதிகமான வேலை பளுவும் சேர்ந்து மேகி நூடுல்ஸ் போன்ற உணவுகளை உண்ணும் நிலைக்கு நம்மை ஆளாக்கிவிட்டது.
உடல் ஆரோக்கிய வல்லுனர்களால் ஜங்க் உணவு வகையில் சேர்க்கப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மைதா சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது மிஞ்சிய மைதா உமியில் இருந்து தயார் செய்யப்படுவதால் இதில் கொழுப்பு, கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இது சுலபமாக செரிமானமாகும் உணவல்ல எனவும் இதனை தொடர்ச்சியாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
மேகி சாப்பிடுவதால் கல்லீரல் செயலிழக்க வாய்ப்பு உள்ளதாம்.அது கல்லீரல் புற்றுநோயாவும் மாறலாம். செரிமான அமைப்பில் பிரச்சனைகள் பெரும்பாலும் மேகியை நம்பி வாழ்பவர்களுக்கு செரிமான அமைப்பில் பல பிரச்சனைகள் ஏற்படும்.