தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பிரம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் இந்த ஆணைக்குழு கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பான பல விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த இந்த ஆணைக்குழு, புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதன் அல்ல மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பணிகளை விரைவாகவும் திறமையாகவும் நிறைவேற்றுவதற்காக காமயில் வியர் டேவிட் ஆணைக்குழுவின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து கட்சிகளின் அமைப்பை வலுப்படுத்துதல், அரசியல் கட்சிகளுக்கு பொது நிதி வழங்குதல், அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு தலைமை பொறுப்புக்கூறல், தேர்தல் பிரசாரங்களுக்கு ஏற்படும் செலவைக் குறைத்தல் போன்றவற்றை இந்த ஆணைக்குழு ஆராயவுள்ளது.