ஐப்பசி மாதத்தின் முக்கியத்துவம் ..!

by Editor News

ஐப்பசி மாதம் விஷ்ணு பகவானுக்கு பிடித்தமான மாதமாகும். ஐப்பசி பொதுவாகவே முக்திக்கான நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் இந்த மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இந்து மதத்தில், ஐப்பசி மாதத்தில் புனித நதியில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. புனித நதியான நர்மதை, கங்கையில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கங்கையில் ஸ்நானம் செய்பவருக்கு பூமியில் உள்ள அனைத்து புனித யாத்திரைகளுக்கும் சென்ற புண்ணியம் கிடைக்கும் என்று இந்து மதத்தில் கூறப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் தீப தானம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது. பத்ம புராணம், நாரத புராணம் மற்றும் ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் ஐப்பசி மாதத்தின் சிறப்பு மகிமை விவரிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள், தொண்டுகள் மற்றும் ஆன்மீக செயல்கள் கடவுளை நேரடியாக சென்றடைவதால், ஐப்பசி மாதம் முக்திக்கான வாசல் என்றும் அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் நடைபெறும் பண்டிகைகள்:

இந்த மாதத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம், தீபாவளி, கந்தசஷ்டி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகா புண்ணியம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஐப்பசி மாதம் முழுவதும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம்.

நவம்பர் 1 ஆம் தேதி கர்வா சௌத், நவம்பர் 5 ஆம் தேதி அஹோய் அஷ்டமி, 9 ஆம் தேதி ரம்பா ஏகாதசி, 10 ஆம் தேதி தண்டேரஸ் பூஜை, 12 ஆம் தேதி நாக சதுர்தசி, தீபாவளி, 13 ஆம் தேதி கோவர்தன் பூஜை, நவம்பர் 14, 17 ஆம் தேதி பாய் தூஜ் 18ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் ஆகியவை கொண்டாடப்படுகிறது. அத்துடன் நவம்பர் 20, தேவுத்தன் ஏகாதசி – நவம்பர் 23, துளசி விழா இப்படியே மாதம் முழுவதும் திருவிழாக்களுடன் கழியும்.

மகாவிஷ்ணு உறக்கத்தில் இருந்து எழுந்தருளுகிறார்

ஐப்பசி மாதத்தில் விஷ்ணு உறக்கத்தில் இருந்து எழுந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்று ஜோதிடர் பண்டிட் அவினாஷ் மிஸ்ரா கூறுகிறார். இம்மாதத்தில், விஷ்ணு பகவான் பூமியில் உள்ள தனது பக்தர்களிடையே தண்ணீரில் வசிக்கிறார். எனவே, ஐப்பசி மாதத்தில் புனித ஸ்தலங்களான காவிரி, கங்கை மற்றும் நர்மதையில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதனுடன், ஸ்கந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள கதையின்படி, மகாதேவன் மற்றும் அன்னை பார்வதியின் மகனான கார்த்திகேயனும் இந்த மாதத்தில் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்தார். இந்த சூரபத்மனை அழித்த நிகழ்வு தான் சூரசம்ஹாரம் என்று சொல்லப்படுகிறது.

இம்மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடுதல், தானம் செய்தல், வழிபாடு செய்தல், ஹவனம் செய்தல் போன்றவற்றின் மூலம், விஷ்ணு பகவானுடன் லட்சுமி தேவியின் சிறப்பு அருள்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Related Posts

Leave a Comment