வானிலை மாற தொடங்கிவிட்டாலே கை கால்களின் வரட்சி முதல் துவங்கி கூந்தல் வரட்சி முடி உதிர்தல், உடைதல் போன்ற பல பிரச்சனைகள் வரும். இதுபோன்ற கூந்தல் பிரச்சனைகளில் நீங்கள் அவதி பட்டால் கவலை வேண்டாம். முடியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் வெந்தயம் இருந்தாலே போதும். கூடுமானவரையில் வீட்டிலிருந்த படியே நாமாகவே சரி செய்து கொள்ள முடியும். வெந்தயத்தில் காணப்படும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் வந்தையத்தை கூந்தலில் தடவும்பொழுது முடி உதிர்வு குறைகிறது, முடி வளர ஆரம்பிக்கிறது, தலையில் பொடுகு நீங்குகிறது, முடியின் வறட்சி நீங்குகிறது மற்றும் மயிர்க்கால்கள் மேம்படுவது மட்டுமல்லாமல் முடி நீளம் வேகமாக அதிகரிக்கிறது. அதனால் வெந்தயத்தை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தய எண்ணெய் :
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவில் வந்தையத்தை சேர்த்து கொதித்தப்பின், ஆரியதும் வடிகட்டி தலைமுடிக்கு உபயோகிக்கலாம். இதனை தலைமுடியில் வாரத்திற்கு 2 முதல் 3 முறை தடவி வர முடி வளர ஆரம்பிப்பதை கண்கூடாக காண முடியும்.
வெந்தய ஹேர் மாஸ்க்:
3 டேபிள் ஸ்பூன் வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து அதை தலைமுடியில் வேர் முதல் நுனி வரை தடவி அரை மணி நேரம் வைத்திருந்த பின் தலை முடியை குளிர்ந்த நீரில் அலசவும். இந்த ஹேர் மாஸ்கை அடிக்கடி உபயோகிக்கும் பட்சத்தில் தலைமுடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவது மட்டுமல்லாமல் தலையில் உள்ள பொடுகை நீக்கி அதன்பின் வராமல் தடுக்க உதவுகிறது.