தீபாவளி பண்டிகை.. சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் 70 ஆயிரம் பேர் முன்பதிவு ,..

by Editor News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருக்கும் தென்மாவட்ட மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், பிற மாநிலங்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கில் முன்பதிவு செய்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் கூறியுள்ளார்.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி என்பது இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஞாயிறு அன்று இரவே பலர் மீண்டும் சென்னை திரும்ப முன்பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் இது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment