115
உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (30) அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் Anna Bjerde உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உலக வங்கியின் நிதி உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது .