அண்மையில் ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கிய எலான் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றினார். மேலும் தொடர்ச்சியாக அதில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகிறார். அண்மையில் அவர் ட்விட்டர் தளத்தில் ஏற்படுத்த இருக்கும் மாற்றங்களுக்காக அவர் பலரால் பெரியவர் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதேபோல மற்றொரு விஷயத்தை பேசி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார் எலான் மஸ்க். அவர் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் “விக்கிபீடியாவை நான் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்கன் டாலர் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் அந்த பெயரை “Dickipedia” (ஆணுறுப்பை குறிக்கும் சொல் அது என்பது குறிப்பிடத்தக்கது) என்று மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மஸ்க்கின் இந்த பதிவை கண்ட பயனர் ஒருவர் விக்கிபீடியாவிடம், “நீங்கள் அந்த தொகையைப் பெற்றுக் கொண்டு அவர் சொல்வது போல பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு உடனடியாக மீண்டும் அவர் சொன்ன பெயரிலிருந்து வேறொரு பெயருக்கு மாற்றம் செய்து விடுங்கள்” என்று கூறியிருந்தார். இதை கண்டு அதற்கு பதில் அளித்த எலான் அவர்கள், “நான் ஒரு முட்டாள் அல்ல, விக்கிபீடியா, Dickipedia என்ற அந்த பெயர் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த ஆண்டு மே மாதம், விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், துருக்கியில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை விமர்சிப்பவர்களை தணிக்கை செய்ததற்காக திரு. மஸ்க் மீது கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் மஸ்க் இதுபோன்ற செயல்களை செய்கின்றார் என்று கூறப்படுகிறது.