அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக லக்னோவில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 43.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 209 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வழங்கியிருந்தாலும் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக சோபிக்காததால் ஓட்டங்களை குவிக்க முடியாமல் போனது.
இலங்கை அணி சார்பாக குஷால் பெரேரா 78 ஒட்டங்களையும் பத்தும் நிஸங்க 61 ஒட்டங்களையும் சரித் அசலங்க 25 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணி சார்பாக அடம் சாம்பா 8 ஓவர்களை வீசி 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
மேலும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர். இந்நிலையில் 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற இலக்கோடு அவுஸ்ரேலிய அணி துடுப்பெடுத்தாடிவருகின்றது.