103
தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் ஒக்டோபர் 16 தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்றும் எதிர்வரும் 18ஆம்திகதி பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.