ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சில ராசிகளை சேர்ந்த பெண்கள், நம்பிக்கை, கருணை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை சிரமமின்றி வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் எந்தெந்த ராசிகளை சேர்ந்த பெண்கள் ராணிகளை போல் வாழ்வார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..
சிம்மம் : பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த ஆளுமைக்கும், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் குணத்திற்கும் பெயர் பெற்றவர்கள். எனில் சிம்ம ராசி பெண்கள், எங்கு சென்றாலும் கவனத்தை ஈர்க்கும் உள்ளார்ந்த கவர்ச்சியைக் கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கை மற்றும் ஈர்க்கும் ஆளுமை ஆகியவை காரணமாக அவர்களை உண்மையான ராணிகளாகவே மாற்றுகிறது. சிம்ம ராசி பெண்களுக்கு மரியாதை மற்றும் பாராட்டு தேவை என்று கட்டளையிடும் ஆளுமை உள்ளது. அவர்கள் திருமண வாழ்க்கையில் மட்டுமின்றி, நட்பு வட்டாரத்திலும் ராணி போலவே வாழ்வார்கள்.
மகரம் : மகர ராசி பெண்கள், அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் வலுவான பணி நெறிமுறைக்கு பெயர் பெற்றவர்கள். வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறுவதில் சிறந்து விளங்கும் இயல்பான தலைவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். ஞானம் மற்றும் எதார்த்த நடைமுறையை யோசிக்கும் திறன் ஆகிய குணங்களுடன் அவர்கள் ராணி போல் வாழ்கின்றனர்.
துலாம்: துலாம் ராசியை சேர்ந்த பெண்கள், நேர்த்தி மற்றும் கருணையின் வடிவமாக அறியப்படுகின்றனர். துலாம் ராசி பெண்கள், சமநிலை மற்றும் நியாயம் நீதி மீது தீவிர உணர்வு கொண்டவர்லள். இதனால் அவர்கள் இயல்பிலேயே இராஜதந்திர ஆட்சியாளர்களாக இருக்கின்றனர். மேலும் துலாம் ராசி பெண்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் நல்லிணக்கத்தை உருவாக்குகிறார்கள். தங்களின் நேர்த்தியான அழகின் மூலம் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
மேஷம் : மேஷ ராசிப் பெண்கள், சாகச மனப்பான்மையும், தளராத மன உறுதியும் கொண்டவர்கள். பயமின்றி ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் மற்றவர்களை வழிநடத்துகிறார்கள், எனவே மேஷ ராசி பெண்கள் இயற்கையாகவே ராணி போல் வாழ்கின்றனர். மேலும் அவர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள். தங்களின் தைரியமான தலைமைத்துவத்தால் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
விருச்சிகம் : விருச்சிக ராசிப் பெண்கள், மற்றவர்களை ஈர்க்கும் ஒரு புதிரான கவர்ச்சியைக் கொண்டுள்ளனர். இந்த பெண்களின் தீவிர ஆர்வமும் உணர்ச்சி ஆழமும் அவர்களுக்கு மர்மத்தையும் சக்தியையும் தருகிறது. வசீகரிக்கும் தீவிரத்துடன் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மற்றவர்களை ஆள்கின்றனர்.மேலும் விருச்சிக ராசி பெண்களின் தலைமைத்துவம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
சிம்மம், மகரம், துலாம், மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிப் பெண்கள் இயற்கையாகவே தங்களை தலைவர்களாக நிலைநிறுத்தும் தனித்துவமான குணங்களைக் கொண்டுள்ளனர். கட்டளையிடும் ஆளுமை, உறுதிப்பாடு, இராஜதந்திரம், அச்சமின்மை மற்றும் மர்மம் ஆகியவை இந்த ராசி ராணிகளாக மாற்றுகின்றன..