பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
இதன்படி, விதிகளை மீறும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான போரினால் எழுந்த யூத எதிர்ப்பு அதிகரிப்பு காரணமாக ஐரோப்பிய அரசாங்கங்கள் அச்சமடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தடையை மீறி பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்; முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, போராட்டக்காரர்கள் இஸ்ரேல் கொலைகாரன் மற்றும் பலஸ்தீனம் வெல்லும் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்த நிலையில் , பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதாகக் கூறி பலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.