பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்த ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர்.
புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கூட்டுப் பிரகடனத்தின் போதே இவ்வாறு உறுதியேற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றது. எரிசக்தி அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்படும் அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களையும் கடுமையான எதிர்ப்பதாகவும் ஜி20 நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படும் விவகாரங்கள், நாடாளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு சட்டங்களாக மாற்றமடைய வேண்டும் என் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.