ஏழு வகை மனிதப் பிறவிகள்

by Lankan Editor

மாமுனிவர் அகத்தியர் பெருமான் கூறியது…

கடவுள் 1மனிதனாகப்பிறப்பது
2 மனிதன் மனிதனாகப்பிறப்பது
3 மிருகம் மனிதனாகப்பிறப்பத
4பறவைகள் மனிதனாகப்பிறப்பது
5நீர் வாழ்வன மனிதனாகபிறப்பது
6பூச்சிபுளு மனிதனாகப்பிறப்பது
7மரம்செடிகள் மனிதனாகபிறப்பது.

இப்படியாக மனிதப்பிறவிகள் ஏழுவகையாக பிரிக்கப்பட்டு அப்பிறவிகளில் செய்யக்கூடிய பாவபுன்னியங்களுக்கு ஏற்ப மாறிமாறி பிறந்தும் இறந்தும் வாழ்கின்றோம்.

1 கடவுள் மனிதனாகப் பிறந்தால் நீதிகளையும் தர்மங்களையும் போதித்து ஆலயங்களை எழுப்பி அங்கே தானதர்மங்கள் செய்வர் பல்லுயிர்களும் நலம் வாழ தவம் தியானம் யாகம் பலசெய்வார்.

2 மனிதன் மனிதனாகப்பிறந்தவர் நீதி நியாயமாய் வாழ்வார் தான தர்மங்களை செய்வார் மரங்களை நடுவார் மிருகம் பறவைகளுக்கு பசியினை போக்க வழிவகை செய்வர்.

3 மிருகம் மனிதனாகப்பிறப்பது எந்தநேரமும் உழைப்பான் ஆனால் அதனை சரிவர பயன்படுத்தாமல் வீன் செய்து விடுவார் நீதி நியாயம் எதையும் பார்காமல் எவர் பொருளானாலும் எடுப்பார்கள் மற்றவர் மனதை துன்புறுத்துவர்.

4 பறவைகள் மனிதனாகப்பிறப்பவன் எப்போது உழைக்காமலே அடுத்தவர் பொருளை பறிக்கவே திட்டமிடுவார் மிருகம் பறவைகளை உயிரென்றும் பாராது அறுத்து உன்பார் நீநி தர்மம் எதையம் செய்யமாட்டார்கள்.

5 நீர்வாழ்வன மனிதனாகப்பிறந்தால் அடுத்தவரை பழித்தல் நயவஞ்சகம் செய்தல் புறம்பேசுதல் இழிவாய் பேசுவது குற்றச்செயல்கள் செய்வது இதுபோன்றவைகளை செய்வார்கள்.

6 புளுபூச்சி மனிதனாகப்பிறந்தால் வீன்பழி போடுதல் எந்த வார்த்தையும் தவறாகவே வரும் எல்லோரையும் மகான்களையும் ஏன் கடவுளையும் கூட இழிவாகப் பேசுவார் கொலை களவும் செய்வார்கள்.

7 மரம் செடி மனிதனாகப்பிறந்தால் பூமியில் ஜடமாய் பிறந்து வாழும் எந்தவேலையும் செய்யாது எதற்க்காக வாழ்வது என்றே அறியாமல் வாழும் பலவகை தவறுகளை செய்தாலும் மறந்துவிட்டு செல்வார் எதை வேண்டுமானாலும் தின்பார்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போவார்கள்.
இப்படியாக சித்தர்பெருமான் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment