இஸ்ரேலுடன் கரம் கோர்க்கும் பிரித்தானியா?

by Lankan Editor

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து 7 ஆவது நாளாகப் போர் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் பிரித்தானியா இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்களது ‘R08 குயின் எலிசபெத்’ (R08 Queen Elizabeth) என்ற போர் கப்பலை காசா நோக்கி அனுப்பவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் போர் கப்பல் மொத்தம் 60 போர் விமானங்களை தாங்கக்கூடியது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் விதமாக  அமெரிக்கா யூ.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு என்ற விமானம் தாங்கிப்  போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியிருந்தது.

இப் போர் கப்பலானது  போர் விமானங்களை கொண்டு இருப்பதுடன், அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் திறனும் கொண்டது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment