இஸ்ரேல்- ஹமாஸ் போர்; இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

by Lankan Editor

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே  கடந்த 6 நாட்களாக தொடர்ந்தும் போர் நீடித்து வரும் நிலையில் இப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், அங்கு வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுளள்ளார். அதற்கிணங்க, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பாக அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இதில், இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அல்லது வேறு ஏதேனும் சிரமங்கள் இருப்பின், இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாகத் அறிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இஸ்ரேலில் வாழும் உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையர்களும் (ூ94) 117966396) எனும் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தியோ அல்லது (ூ94) 767463391) எனும் வட்சப் இலக்கத்தின் ஊடாகவோ தொடர்பு கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தோடு `opscenga@gmail.com` எனும் மின்னஞ்சல் ஊடாகவும் தேவையான உதவிகளைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட குடிவரவு குடியகல்வு நடைமுறைகள் மற்றும் வேறு எந்த முறையின் கீழும் இஸ்ரேலில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இந்த சேவையைப் பெற முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment