168
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் இலங்கை அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டியில் இலங்கை அணிக்கு சானகவும் பாக்கிஸ்தான் அணிக்கும் பாபர் அச்சமும் தலைமை தங்கவுள்ளனர்.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 8 சந்தர்ப்பங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் 7 சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் அணியிடம் இலங்கை அணி தோல்வியடைந்த அதேநேரம் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.