இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுவுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வரும் நிலையில், ரொக்கெட் மற்றும் விமான தாக்குதல்களில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை காயமடைந்தவர்களில் 70 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் போராளிகள் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு , பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரேன் , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், லெபனானில் உள்ள போராளிகுழுக்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு இருப்பினும் இரு தரப்பும் மோதலை கைவிடுமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் போரில் காயம் அடைந்தவர்களுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படுவதாகவும், மக்கள் இரத்ததானம் செய்ய முன்வருமாரு இஸ்ரேல் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் ஒரு வருடம் கடந்து நீடித்து வரும் நிலையில் , இஸ்ரேலுக்கும் பாலிஸ்தீனத்துக்கும் இடையிலான போர் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.