132
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்ததாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் சனிக்கிழமை ( Herat) பகுதிக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதோடு மக்கள் வீடுகளில் இருந்து வௌியேறி வீதிகளுக்கு வந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.