தனுஷ், அமலாபால் உட்பட 14 பேருக்கு ரெட் கார்டு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணயில் இருக்கும் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய நடிகர்கள் தயாரிப்பாளருக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என சொல்லப்படுகின்றது.
இதன் காரணமாக தனுஷ், அமலாபால் உள்ளிட்ட மொத்தம் 14 நடிகர்கள் ரெட்கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.
ரெட் கார்டு கொடுத்தது ஏன்?
கோலிவுட்டில் நடிகர்களின் கால்ஷீட், சம்பளம் குறித்து அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வருகின்றது.
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மீட்டிங் நடைபெற்றது. இந்த மீட்டிங்கில் கலந்து ஆலோசிக்கும் போது அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காத நடிகர்கள் மீது ரெட் கார்டு விதிக்கப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில், சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா உள்ளிட்ட 14 நடிகர்களின் மீது இந்த புகார் எழுந்துள்ளது.
முக்கிய முடிவுகள்
1. நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பாதுகாப்பாக வரும் பவுன்சர்களுக்கு தயாரிப்பாளர்கள் சார்பில் சம்பளம் வழங்கப்படாது. மாறாக நடிகர், நடிகைகள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும்.
2. நடிகர் நடிகைகளின் மேக்கப் மேன் மற்றும் உதவியாளர்கள் பெப்ஸியில் உறுப்பினராக இருந்தால் மாத்திரம் தான் சம்பளம் வழங்கப்படும்.
3. நடிகர்களுக்கு சம்பளம் வழங்கும் போது கமிட்டாகும் போது 10%, படப்பிடிப்பில் இருந்து டப்பிங் வரை 60%, படம் ரிலீஸாகும் முன்பு மீதமிருக்கும் 30% என மூன்று பகுதிகளாக பிரித்து தான் சம்பளம் கொடுக்க தீர்மானிக்கபட்டுள்ளது.