ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், அந்த போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் அணி இரண்டாது தகுதி சுற்றுக்கு சென்றது. இதேப்போல் வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதின. இதில் மும்பை அணி லக்னோ அணியை 81 ரன்கள் வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாது தகுதி சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குஜராத் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாப்பத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 4 முறை சாம்பியனான சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வரும் நிலையில், நடப்பு சாம்பியனான குஜராத் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பயை வெள்ள முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.