தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் காலம் நிலவி வருவதால், கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு வெப்பமும், அணல் காற்றும் அதிமகாக இருப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தச் சூழலிலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.