ஆயுர்வேத சிகிச்சையில் பல நூற்றாண்டுகளாக இஞ்சி வேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செரிமான பிரச்சனைகள் முதல் தலைவலி வரை பலவற்றுக்கு இஞ்சி நிவாரணம் அளிக்கிறது. அதே நேரம் உலர் இஞ்சி பொடியானது (Dry ginger powder), உணவுகளில் சுவை மற்றும் வாசனையை கூட்ட பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக உலர்ந்த இஞ்சி வேரில் இருந்து இஞ்சி பொடி தயாரிக்கப்படுகிறது. இஞ்சி பொடியானது வெள்ளை அல்லது சற்று பிரவுன் கலர் கொண்டது மற்றும் இது ஸ்ட்ராங்கான வாசனை மற்றும் சற்று காரமான சுவை கொண்டது. இஞ்சி பவுடரை எளிதாக ஸ்டோர் செய்து வைக்கலாம் என்பதோடு சரியாக சேமித்து வைத்தா சுமார்1 வருடம் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
வயிற்று உபாதையிலிருந்து விடுபட உதவும்: வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் எரிச்சலூட்டும் அதே நேரம் வலியையும் ஏற்படுத்தும். இஞ்சியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் Digestive juices-களை நியூட்ரலைஸாக்க உதவுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் சரியான முறையில் விரைவில் செரிமானமாக உதவுகிறது. தவிர குடல் பாதையில் இருக்கும் அதிகப்படியான வாயுவை நீக்குகிறது.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது: உலர் இஞ்சி பவுடரில் கொழுப்பை எரிக்க உதவி செய்யும் தெர்மோஜெனிக் ஏஜென்ட்ஸ் உள்ளன. எனவே இஞ்சி பவுடரை தினசரி எடுத்துகொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். உடலில் தேங்கி இருக்கும் அதிகப்படியான கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்கவும் இஞ்சி பொடி உதவுகிறது. நீங்கள் உடல் டையை குறைக்கும் முயற்சியில் இருந்தால், தினசரி டயட்டில் இஞ்சி அல்லது இஞ்சி பவுடரை சேர்க்கலாம்.
மோஷன் சிக்னஸ் அல்லது மார்னிங் சிக்னஸ் பிரச்சனைக்கு… கர்ப்பிணி பெண்கள் எதிர்கொள்ளும் மோஷன் சிக்னஸ் மற்றும் மார்னிங் சிக்னஸ் சிக்கல்களுக்கு இஞ்சி பொடி சிறந்த தீர்வாகும். இஞ்சி பொடியை நீரில் கலந்து குடிப்பது குமட்டலை தடுக்க உதவும். இஞ்சி பொடி வயிற்றுக்கு இதமளிப்பதோடு வீக்கத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
ஜலதோஷத்திற்கு நிவாரணமளிக்கும் : இஞ்சி வேரில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகல்ஸ் (shaogals) ஜலதோஷத்தை போக்க உதவுகின்றன. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி பொடியை கலந்து குடிப்பது ஜலதோஷம் மற்றும் ஃப்ளூவிலிருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கும். தவிர இஞ்சி பொடி, கிராம்பு பொடி, உப்பு உள்ளிட்டவற்றை கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தாலும் சளிஅல்லது ஜலதோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சமையல் பயன்கள்: உலர்ந்த இஞ்சி பொடி பொதுவாக மசாலாப் பொருட்களில், Curries மற்றும் Stews-களில் பயன்படுத்தப்படுகிறது. ராஜ்மா மற்றும் சோலே மசாலாவில் இஞ்சி பொடியை ஒரு சிட்டிகை சேர்ப்பது அவற்றுக்கு சுவை கூட்டுவதை தவிர, வயிற்றில் அதிகப்படியான வாயுவைத் தடுக்க உதவும். சளி, ஜலதோஷம் அல்லது தொண்டை வலிக்கு ஒரு கப் மசாலா டீ சிறந்த நிவாரணமளிக்கும். இதற்காக இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம் மற்றும் இஞ்சி பவுடர் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் சூடான டீ-யை பருகலாம். உலர் இஞ்சி பவுடர் இஞ்சி மிட்டாய்களுக்கு சுவை சேர்க்க பயன்படுகிறது, இது வாயுத்தொல்லைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.