தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ படத்திற்கு பின் யாருடைய இயக்கத்தில் விஜய் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிலும் விதமாக தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் தான் தளபதி விஜய் தன்னுடைய தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக வெளிவந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு ஜப்பானியில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய்க்கு ஒசாகா திரைப்பட விழாவில் சிறந்த நடிகரான விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.