நிறைவேறும் 5 வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி

by Editor News

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டிரவா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையா இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணத்தையும் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தொடர்ந்து மாநிலத்தின் துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்று கொண்டது.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி , “அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களில் கர்நாடக மாநிலத்தின் அமைச்சரவை கூடி காங்கிரஸ் உறுதி அளித்த முதல் ஐந்து வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற உள்ளது. இன்று முதல் கர்நாடக மாநிலத்தில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்து பல விஷயங்கள் எழுதப்பட்டன. நாங்கள் ஏழைகள் ,தலித்துகள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர் பக்கம் நின்றோம் . இதனால் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. எங்களுக்கு ஆதரவளித்து அனைத்து தலைவர்களுக்கும் , கர்நாடக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் வழங்க மாட்டோம் .சொல்வதை செய்கிறோம். ஜாதி, மத, பேதம் இன்றி அனைவரும் ஒன்று போல நடத்தியது தான் வெற்றிக்கு காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சார வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு 2000 வழங்கப்படும் . இந்த வாக்குறுதி உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்” என்றார்.

Related Posts

Leave a Comment