பாகற்காய் – 1 கிலோ.
மைதா மாவு – 2 அல்லது 3 டீஸ்பூன்
பூண்டு – 9 முதல் 10 பல்.
இஞ்சி – 1 துண்டு.
வினிகர் – 1 அல்லது 2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.
மோர் – 1/4 கப்.
உப்பு – 1 அல்லது 2 தேக்கரண்டி.
எண்ணெய் – 4 அல்லது 5 டீஸ்பூன்.
முதலில் பாகற்காயை தண்ணீரில் கழுவ வேண்டும்.
பின்னர், கழுவிய பாகற்காயை மெல்லிய வட்ட துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டியா பாகற்காய் துண்டுகளை புளித்த மோரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
10 நிமிடம் கழித்து பாகற்காய் துண்டுகளை மட்டும் பிழிந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது, இஞ்சி மற்றும் பூண்டை சுத்தம் செய்து உரலில் நசுக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.
இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு, இதில் சிறிது வினிகர் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு அல்லாமல், கொஞ்சம் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
அதில், நறுக்கிய பாகற்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
இப்போது, ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், பாகற்காயை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்தால், கேரளா ஸ்டைல் பாகற்காய் வறுவல் தயார்.