187
அல்போன்சா மாம்பழம் – 3.
மாங்காய் – 1 கப்.
சர்க்கரை – 1 கப் (250 கிராம்).
தண்ணீர் – 1 லிட்டர்.
முதலில் மாம்பழத்தை நகு கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதே போல, மாங்காயையும் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், மாங்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
பின்பு இதை வடிகட்டி நன்கு ஆறவிடவும். இதையடுத்து, வேகவைத்த மாம்பழத்தை மிக்சி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
பின்பு மாம்பழம் வேகவைத்த தண்ணீரில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
பிறகு மறுபடியும் கலந்த வைத்த மாம்பழ கலவையை வடிகட்டி, ஒரு கிளாசில் ஊற்றினால் அருமையான மாம்பழ ப்ரூட்டி தயார்.