தேவையான பொருட்கள் :
சிக்கன் – 500 கிராம்.
வெங்காயம் – 1.
குடைமிளகாய் – 1.
இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்.
பச்சை மிளகாய் – 3.
சோள மாவு – 1/2 கப்.
சோயா சாஸ் – 2 கப்.
கொத்தமல்லி – 1 கொத்து.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
முதலில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு சுத்தம் செய்து. பின்னர் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
இதேப்போன்று, எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
இதற்கிடையில், ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாயினை காம்பு நீக்கி சேர்த்து, பேஸ்ட் போல் அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது, ஒரு மிக்ஸிங் பாத்திரத்தில் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, 1 ஸ்பூன் பச்சை மிளகாய் விழுது, சோயா சாஸ், உப்பு மற்றும் நறுக்கிய சிக்கன் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடத்திற்கு பாத்திரத்தை மூடி ஊற வைக்கவும்.
தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும், ஊற வைத்த சிக்கன் துண்டுகளை இதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பின்னர், மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சிப் பூண்டு விழுது 1 ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது 1 ஸ்பூன், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இதில் வறுத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். பின்னர், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சிக்கனில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான சில்லி சிக்கன் ரெடி.