தேவையான பொருட்கள் :
கேரட் – 3.
உளுத்தப்பருப்பு – 1 ஸ்பூன்.
புளி – எலுமிச்சை அளவு.
வெங்காயம் – 4.
பூண்டு பல் – 3.
கடுகு – ½ ஸ்பூன்.
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
கா.மிளகாய் – 5.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
முதலில், எடுத்துக்கொண்ட கேரட் மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இதையடுத்து, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் உளுந்து, காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர், இதே கடாயில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். அதை தொடர்ந்து இதில் கேரட்டையும் சேர்த்து 3 முதல் 4 நிமிடத்திற்கு வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.
தற்போது மிக்ஸி ஜார் ஒன்றில் வதக்கி வைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து, அதில் சிறிதளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இப்போது, சட்னியை தாளிக்க, சிறிய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
பின் இந்த தாளிப்பினை தயாராக உள்ள சட்னியில் சேர்த்து கலந்துவிட்டால், சுவையான கேரட் சட்னி ரெடி. இதை இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து வகை உணவுக்கும் கொடுக்கலாம்.